Wednesday, November 22, 2017

கண்டறியாத கதைகள் - 7 - கைத் தையல் கலை ( Hand Embroidery)


தையலூசி கீறும் காட்சி...


 ஒரு காலத்தில் கைகளினால் தையல் ஊசி கொண்டு பலவித வடிவங்களை தலையணை உறை, மேசைச்சீலை கதிரைச் சீலை போன்றவற்றுக்குப் போட்டு அழகு படுத்தினார்கள். ( art of embroidery ) இன்றய காலங்களில் பலவித உருவ வேலைப்பாடுகளோடு துணிகள் வருவதாலும் தையல் இயந்திரம் அந்த வேலையை துரித கதியில் செய்து முடித்து விடுவதாலும் பெயின்ரிங் அதன் கலைப்பக்கத்தைக் களவாடிக்கொண்டு விட்டதாலும் மக்களிடம் நேரமின்மை காரணமாகவும் தையல் ஊசி கொண்டு பல வண்ண களி நூல்களால் தைக்கும் வழக்கம் இல்லாதொழிந்து போகிறது.

என் சிறிய தாயார் - இந்துவன்ரி - ஒரு காலத்தில் சிறந்த தையல்காரியாக இருந்தார். அவர் கன்னிப் பருவத்தில் இருந்த போது நான் 6,7,8 வயதாக இருந்த அந்தக் காலத்தில் அவ வசித்த வீட்டு சைட் அறை தையலுக்கெனவே 8 இலாச்சிகள் கொண்ட மேசையோடும் நல்ல ஒரு சிங்கர் தையல் இயந்திரத்தோடும் அமைந்திருந்தது. இந்துவன்ரி சுமார் 6 மாதங்கள் கைத்தையல் பழகி இருந்தார். நான் களவாக சென்று ஆராய்ந்து பார்த்து மகிழ்ந்தது நல்ல ஞாபகம். ஒரு தகரப் பெட்டியில் கையால தைக்கத் தக்க சகல அழகியல் அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த தொகுப்பை அவர் அப்போது வைத்திருந்தார்.

 சிறுவயதிலேயே அவற்றைப் பார்த்து இவைகள் எல்லாம் இப்படி எல்லாம் தையலூசியினால் சாதிக்க முடியுமா என்று பார்த்துப் பார்த்து வியந்ததுண்டு. அதனை நானும் ஜிம்மி என்றொரு அழகிய நாயும் மட்டுமே அறிவோம். இவர்கள் யாருக்கும் தெரியாமலே அதனை நான் பார்த்து ரசித்து வியந்து பிறகு அதனை அப்படியே இருந்த படி வைத்து விட்டு போயிருக்கிறேன். இவர்கள் எவரேனும் அறிந்தால் முதுகுத் தோல் பிய்ந்திருக்கும்.

சுமார் 60 / 70 வகைகள் இருக்கக் கூடும் ....

இப்போது இது ஏன் நினைவுக்கு வந்ததென்றால் நான் வவுனியாவுக்கு என் சின்னம்மா வீட்டுக்குப் போயிருந்த போது கதிரைகளுக்கு கதிரைச் சீலைகள் போடப்பட்டிருந்தன. பின்னல் கதிரைகள் வேறு.... இவைகளை இங்கு (சிட்னியில்) காணமுடியுமா என்ன? இங்கு எல்லாமும் சொகுசு மெத்தைக் கதிரைகள். புதைந்து போய் விடுவோம்.. :) ( நான் கடந்த கால நினைவுகளில் சொக்கி போனேன்) அதற்கு பெயின்றால் பூ கீறப்பட்டிருந்தது. ஏன் அன்ரி இப்ப தைக்கிறதில்லையோ என்று கேட்டேன். ஆர் பிள்ளை இப்ப தைக்கினம்... மினைக்கெட்ட வேலை என்றா.  நான் போட்டுத் தரட்டோ எண்டு கேட்டன். சந்தோஷமா துணி வாங்கித் தந்தா. இப்ப ஒரு வெறி மாதிரி தையல் வேலை செய்து கொண்டிருக்கிறன்.
தையலூசிகள் பல திணுசுகளில்
தையலூசியில் நூல் கோர்க்கும் உத்தி...

அழகிய நூல் வெட்டும் கத்தரிக்கோல்


பலவண்ண களிநூல்கள்

பல வண்ண பட்டு, பருத்தி நூல்கள்






ஒரே நேரம். கமராவின் தொழில் நுட்பம் காட்டும் நிற வேறுபாடு...







மஞ்சளால் நிறையாத பூக்கள்...


மஞ்சள் நிறம் சேர்த்ததும்....




பெல்ஜியம் நாட்டு மினுங்கும் நூலினால் தைத்தது. கமறா அதன் வண்ணத்தை சரியாகக் காட்டவில்லை... 

அது ஒரு கலை. அது உங்களை மகிழ்ச்சிப் படுத்தும்; மன அழுத்தங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். அது ஒரு உருவாக்கத் திறன். ஆனால் அதன் நுட்பங்கள் எதனையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.வாய்ப்புக் கிட்டவில்லை. என்றாலும் இந்தக் கலையையும் அழிந்து போகும் நம் பாரம்பரியங்களுள் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.

கூகுள் இமேஜினுள் பல திணுசுகளில் வடிவங்கள், புற உருவப்படங்கள் எல்லாம் கொட்டிக் கிடக்கின்றன. கூடவே சர்வதேச நாடுகளில் இருந்து பலரும் தைத்த அழகிய வடிவங்களும் உருவ வேலைப்பாடுகளும் நிறையப் பார்க்கக் கிட்டுகின்றன...அங்கிருந்து பெற்ற வடிவங்களில் தான் இவை உருப்பெற்றன.இவைகள் கடந்த இரு வாரங்களில் தைத்தவை. (1.11.17 - 11.11.17க்குள்) தைத்தவை...

இன்றுள்ள பிள்ளைகளுக்குத் தையலூசி தானும் தெரிய வராமல் போகும் ஆபத்தே அதிகம்.....

உலகு அத்தனை வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது;
........................................

பிற்சேர்க்கை...( 23.11.17. ) (நன்றி; கூகுள் இமேஜ் )

ஒரு சர்வதேச நாடொன்றின்  சீமாட்டி தையலூசியினால் செய்த கைவண்ணங்கள்........

நிறத் தெரிவு...
அம்மா எங்கப்பா...

தத்ரூபம்.....
ஏமாற்றமோ...

பொறுமையின் அழகிய வடிவமும் கூட...

அட்சர சுத்தமான வேலை....

என்ன யோசினை...



ஜோடிப்பறவைகள்

தனிமை ஏனோ...



குஞ்சுகள்...

காத்திருப்பு...

முள் செடியில் அமர்ந்திருக்கும் அழகிய கண்ணே...

3 comments:

  1. ஆஹா... உங்க கைவேலைப்பாடுகள் வெகு அழகு! வடிவத்தை சேகரித்துக் கொண்டு இப்பவே நானும் தைக்க வேண்டும் போல் விருப்பம் எழுகிறது.

    ReplyDelete
  2. பிளீஸ் செய்யுங்கப்பா.... பார்க்க ரொம்ப ஆசையா காத்திருக்கன்...
    https://www.google.com.au/search?hl=en&tbm=isch&source=hp&biw=1280&bih=899&ei=DVwXWuLwPISw8wWggbJw&q=hanad+empryadery+&oq=hanad+empryadery+&gs_l=img.12...2342.16259.0.18557.25.13.1.11.1.0.414.1870.0j2j3j1j1.7.0....0...1ac.1.64.img..6.7.1691.0..0.0.tJzGa_eKGNU

    https://www.google.com.au/search?q=hanad+empryadery&hl=en&tbm=isch&tbs=rimg:CbVSHoJU5Yq0IjiFFoI6a_1hT-51INeBnv18T6wRH9P0vwh47KyDAnJStxW7_1Zkt3YEII4XPSBhifnXqTcG-RUeIrPioSCYUWgjpr-FP7EVIMEO3wel-IKhIJnUg14Ge_1XxMReLb5mx5ZcaAqEgnrBEf0_1S_1CHhFRtabzq5ijASoSCTsrIMCclK3FEatSHeaL2xaLKhIJbv9mS3dgQggRzqVWCKvuBaMqEgnhc9IGGJ-dehE0Xdjyc4icrCoSCZNwb5FR4is-EcZw5365paL0&tbo=u&sa=X&ved=0ahUKEwis38nZ79XXAhWJzLwKHYA8Di0Q9C8IHw&biw=1280&bih=856&dpr=1#i

    தையலூசியின் கை வண்ணம் காண கூகுள் இமேஜில் இந்த லிங்கிற்குச் செல்லுங்கள் நிலா.

    பற்றன்கள் எடுக்க கீழ்வரும் இந்த லிங்கினுக்குள்ளால் சென்று ஆராய்க..
    https://www.google.com.au/search?hl=en&biw=1280&bih=856&tbm=isch&sa=1&ei=uF0XWrbCMYGa8QXv0LG4BA&q=hand+embroidery+patterns&oq=hand+empryadery&gs_l=psy-ab.1.2.0i13k1l10.4651.4651.0.7415.1.1.0.0.0.0.212.212.2-1.1.0....0...1c.1.64.psy-ab..0.1.212....0.fO7wpiGrvfA

    ReplyDelete
  3. கூகுள் search இற்குள்ளால் முயற்சி செய்தும் பாருங்கள் நிலா....

    ReplyDelete